×

கோபியில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனை

 

கோபி, மே 5: கோபியில் உள்ள ஈதுகா பள்ளிவாசலில் கொளுத்தும் வெயிலில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் வருகிறது. இந்தியாவிலேயே 3ம் இடத்தை பிடித்த ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு மேல் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், கோபி ஜாமியுல் கபீர் அஹ்லே சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பாக மழை வேண்டி சிறப்பு தொழுகை, முத்துசா வீதியில் உள்ள ஈதுஹா பள்ளிவாசல் திடலில் நடைபெற்றது. கடும் வெயிலில் கோபி நகரத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையை நடத்தி,

மழை தர வேண்டி தங்கள் அணிந்திருந்த உடைகளை மாற்றி அணிந்து இறைவனிடம் மனமுருகி பிரார்த்தனை செய்தனர்.இந்த நிகழ்வில் கோபி ஜாமியுல் கபீர் பள்ளிவாசல் நிர்வாகிகள், கோபியை சுற்றி உள்ள பல்வேறு பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் சிறுவர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மழை வேண்டி நடத்திய பிரார்த்தனையில் வழக்கத்திற்கு மாறாக தங்கள் கைகளை பூமியை நோக்கி காண்பித்து சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

The post கோபியில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனை appeared first on Dinakaran.

Tags : Gobi ,Iduka Mosque ,Tamil Nadu ,Erode ,India ,
× RELATED கோபி அருகே ஒத்தக்குதிரையில்...